அம்பாறை திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட தாண்டியடி பகுதியில் அமைந்துள்ள திருச்சிலூவை மலைக்கு இன்று(திங்கட்கிழமை) சிலுவை யாத்திரை முன்னெடுக்கப்பட்டது.
மறைவாவட்ட ஆயர் பேரரூட்திரு கலாநிதி யோசப்பொன்னையா ஆண்டகை அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மலையை நோக்கி திருக்சிலுவை ஏந்தி பாத யாத்திரை இடம்பெற்றதுடன் பூசை நிகழ்வுகளும், திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மேலும் இந்த சிலுவை யாத்திரையில் கலந்து கொள்வதற்காக நாட்டில் பல பாகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்தனர்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், பேராயரின் வேண்டுகோலுக்கு இனங்க கலந்து கொண்டிருந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours