(சுமன்)
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் 03ம் நாள் நிகழ்வானது மட்டக்களப்பு புணாணை மைலந்தன்னை பிரதேசத்தின் கொழும்பு பிரதான வீதியில் இன்று இடம்பெற்றது.
இதன்போது வடக்கு கிழக்கில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான சாட்சியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது டன் முள்ளிவாய்க்கால் பேரவல காட்சிகளும் மக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதன்போது முள்ளிவாய்க்கால் உட்பட அனைத்து பகுதிகளிலும் இடம்பெற்ற படுகொலைகளில் உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் தொடர்பில் கருத்துகளும் பரிமாறப்பட்டன.







Post A Comment:
0 comments so far,add yours