(சுமன்)
நாளை 2022.05.15ம் திகதி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான நடைபவணி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் பேரணியில் அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு வலுசேர்க்குமாறு அழைக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க அம்பாறை மாவட்டத் தலைவி த.செல்வராணி தெரிவித்தார்.
இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிக் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை அனுஸ்டிக்கும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. நாளை 2022.05.15ம் திகதி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான நடைபவணி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது அமைப்பினர், சர்வமதப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் ஆதரவினை தரவுள்ளார்கள். எனவே பொதுமக்களும் இந்நடைபவணிக்கு தங்கள் முழுமையான ஆதரவைத் தருமாறு எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரி உறவுகள் சார்பில் கரம் கூப்பி அழைக்கின்றோம்.
நாளைய தினம் காலை 09.30 மணிக்கு பொத்துவில்லில் இருந்து எமது நடைப் பேரணி தொடங்கி திருக்கோவில், அக்கறைப்பற்று. கல்முனை, களுவாஞ்சிக்குடி ஊடாக மட்டக்களப்பு கல்லடிப்பாளத்தினை வந்தடைந்து அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்து அருந்தலுடன் நிறைவடையும், மறுநாள் 2022.05.16ம் திகதி மட்டக்களப்பில் இருந்து ஆரம்பித்து திருகோணமலை மாவட்டத்தைச் சென்றடையும், 2022.05.17ம் திகதி திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு வரை சென்று மறுநாள் 2022.05.18ம் திகதி முள்வாய்க்காலில் எமது நடைபவணி சென்றடைந்து அங்கு உயர்நீத்த எமது உறவுகளுக்காக சுடரேற்றி எமது நினைவு நாளை முடித்து வைப்போம்.
அதுமட்டுமல்லாது இதே விதத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் இவ்வாறானதெரு நடைபவணி மேற்கொள்ளப்பட்டு அவர்களும் முள்ளிவாய்க்காலை வந்தடைவார்கள்.
எமது உறவுகளின் இறப்பினை மறவாது எமது இளைஞர்கள், உறவுகள் இந்த மண்ணிலே நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். காணாமல ஆக்கப்பட்டது எங்களது உறவுகள், உயிர்கள். அவர்களை மறப்பதற்கோ கிழத்தெறிவதற்கோ அவர்கள் போப்பர் துண்டுகளும் அல்ல கசக்கி எறிவதற்கு வேறு பொருட்களும் அல்ல விலைமதிப்பற்ற உயிர்களையே நாங்கள் தொலைத்து நிற்கின்றோம்.
இறுதி யுத்தத்தின் போது ஒரு இலட்சத்து நாற்பத்தோழாயிரம் உறவுகளை நாங்கள் இழந்து நிற்கின்றோம். இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடக்கக் கூடாது. எமது உறவுகளுக்கு இவை மீள இடம்பெறக் கூடாது.
எனவே நாளை நடைபெறவுள்ள இந்தப் பேரணியில் அனைத்து உறவுகள், சர்வமதப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்பினர், ஊடகவியலாளர்கள் என அனைவரும் கட்டாயம் கலந்து கொண்டு எமது போராட்டத்திற்கு வலுசேர்த்து அந்த இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளுமாறு வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours