வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மண்டூர் பாலமுனை பிரதேசத்தில் தன்வசம் கஞ்சாவை வைத்திருந்த நபரை விசேட அதிரடிப்படையினர் கடந்த (8)ம் திகதி கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபரின் வீட்டுக்குச்சென்று சோதனையிட்ட போது தன்வசம் 160 கிராம் கஞ்சாவினை கைப்பற்றியதுடன் குறித்த நபரையும் கைது செய்து வெல்லாவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்த நபரை களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் முன்நிலையில் ஆஜர் படுத்தியபோது எதிர்வரும் (11) திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் சம்பவம் பற்றிய விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours