(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


டாக்டர் எஸ்.நளீமுடீன் எழுதிய "அரசியல் அறம் A.R.M" கவிதை நூல் வெளியீடும் ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேஷனின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் வெள்ளிக்கிழமை (6) மாலை 4:30 மணியளவில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறும்.

ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேஷனின் ஏற்பாட்டில், அதன் ஸ்தாபகத் தலைவி சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளீமுடீன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறைப் பேராசிரியர் ரமீஸ்  அப்துல்லாஹ் நூல் ஆய்வுரை வழங்குகிறார்.

கல்விமான்கள், புத்திஜீவிகள், பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்வில்,
அறிஞர் சித்திலெப்பை ஆய்வு மன்றத் தலைவர் சட்டத்தரணி மர்சூம்  மௌலானா மற்றும் ஆசிரியர் ஜெஸ்மி எம். மூஸா ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours