(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 1 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா இன்று வியாழக்கிழமை (05) கல்லூரியின் மண்டபத்தில் நடைபெற்றது.
"சாதனைகள் படைக்க வரும் அன்புச் செல்வங்களை அன்புடன் வரவேற்கின்றோம்" எனும் தொனிப்பொருளில் பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது கோட்டக் கல்விப்பணிப்பாளர் என்.எம்.ஏ. மலிக், கல்முனை கல்வி வலய பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எல். றிப்கா அன்ஸார் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் உதவி அதிபர்களான எம்.எச். நுஸ்ரத் பேகம், எம். எப். ஐனூல் மர்சூனா, தரம் 1, 2 பிரிவின் பகுதித்தலைவர் டில்ஸானா கலீல், பெண்கள் பிரிவின் பகுதித் தலைவர் ஜெஸீமா ரஷீட், ஒழுக்காற்று பிரிவின் தலைவர் ஏ.எம்.ஜாஸீர் உட்பட பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் நலன்விரும்பிகள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், அதிதிகளால் மாணவர்களுக்கு அகரம் எழுதப்பழக்கிய நிகழ்வும் இடம்பெற்ற அதேவேளை, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.







Post A Comment:
0 comments so far,add yours