மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 400 கிராம் கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்படுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது நேற்று(07) இரவு இடம்பெற்றுள்ளது.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தில் கிடைக்கப்பெற்ற தகவலொன்றிற்கமைய மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட சுற்றிவளைப்பின்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப்படடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post A Comment:
0 comments so far,add yours