( காரைதீவு  நிருபர் சகா)

 

 வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தில் முதலாவது நவோத்ர சகஸ்ர சத மகா சங்காபிஷேகம் நேங வெள்ளிக்கிழமை (06)  நடைபெற்றது.

 ஆலயத்தின் முதலாவது கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சிறப்பாக நடைபெற்றமை அறிந்ததே.

 
கடந்த 29 நாட்களாக மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் தலைமையில் 1008 சங்குகளுடன்  நே காலை  08 மணிக்கு எட்டு மணிக்கு சங்காபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி,  முற்பகல் 11 மணியளவில் சங்காபிஷேகம் நடைபெற்றது.

 சங்காபிஷேகத்தில் கலந்து கொள்ளும் அடியார்களுக்கு மீனாட்சி அம்மனின் திருவுருவப்படம் பொறித்த வர்ணப் படம்  ஒஸ்கார் அமைப்பால் வழங்கப்பட்டது 

அதேவேளை  இரண்டாம் கட்ட பணிநயப்பு விழா  ஆலயத்தில் நடைபெற்றது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours