( காரைதீவு   சகா)


கடலில் வாழும் இழுது மீனின் பிடிக்குள் சிக்கி இளம் மீனவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இச் சம்பவம் நேற்று (8) ஞாயிற்றுக்கிழமை காரைதீவில் இடம்பெற்றுள்ளது.

காரைதீவு.8 ஆம் பிரிவைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் ( வயது 51)  என்ற மீனவரே இவ்விதம் இழுது மீனின் பிடிக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காரைதீவில் முதலாவதாக இடம் பெற்ற இழுதுமீன் பலி என்பதால் மீனவர் மத்தியில் அச்சமும் சோகமும் நிலவுகிறது.

3 பிள்ளைகளின் தந்தையான சு.ஜெயரஞ்சன் பிள்ளைகளையும் மனைவி வி.சுகந்தியையும் விட்டு சென்றுள்ளார்.

கடலில் வாழும் "சொறி முட்டை" என அழைக்கப்படும் இழுதுமீன், நுங்கு மீன் ,ஜெலிபிஸ் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

நேற்று(8) காலை 7.30 மணியளவில் கடலுக்கு மாயாவலை மீன்பிடி தொழிலுக்காக சென்றவேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கரையிலிருந்து சுமார் 100மீற்றர் கடலில் தோணி வந்து கொண்டிருந்தவேளை இறங்கி வலையை கழற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் திடீரென  இழுதுமீன் தலைப்பிட்டு மீனவரை சுற்றிக்கொண்டது.

இதை தற்செயலாக கண்ட ஏனைய மீனவர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

ஒருவாறு அவரை கரைக்கு கொண்டு வந்து வைத்திய சாலையில் சேர்த்தனர்.

எனினும்,காப்பாற்ற முடியவில்லை. பின்னர் தவிசாளர் கி.ஜெயசிறிலின் முயற்சியால் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours