எரிபொருள் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் கா.பொ.த.சாதாரண தர பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் இன்று(19) பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கிய உறுதிமொழிகளுக்கமைய இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது ஆரம்பமாகியுள்ளது.


இலங்கை ஆசிரியர் சங்கத்தின்  கிழக்குமாகாண இணைப்பாளர் பொன்னுத்துரை உதயரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் க.பொ.த சாதாரண பரீட்சை மதிப்பீட்டு பணியில் ஈடுபட்ட சுமார் 1200 ஆசிரியர்கள் இன்றையதினம் கலந்துகொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர தேசிய பாடசாலை, புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை, புனித மிக்கேல் கல்லூரி போன்ற பரீட்சை மதிப்பீட்டு நிலையங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு எரிபொருள் வழங்குவதில் இலகுவான பொறிமுறையை வழங்கவேண்டுமென கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.

”பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையயை நடமுறைப்படுத்து, பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களின் மனநிலையை குழப்பி கல்வியை சீரழிக்காதே, பரீட்சை மதிப்பீட்டாளர்களுக்கு உடன் எரிபொருள் வழங்கு” என சுலோக அட்டையை ஏந்தியவாறு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours