இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்த்தன சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இலங்கையின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் அலுவலகத்திலேயே, சற்று முன்னர் இந்த பதவிப் பிரமாணம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
சிரேஷ்ட அரசியல்வாதியான தினேஸ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகித்ததுடன், பிரதமராக பதவியேற்பதற்கு முன்னதாக சபை முதல்வராகவும் செயற்பட்டார்.

Post A Comment:
0 comments so far,add yours