(சா.நடனசபேசன்)

கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார மேம்பாடு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்கிவரும் சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் திராய் மடுப் பிரதேசத்தில் குடிநீருக்கு கஷ்டப்பட்டுவந்த 3 குடும்பத்திற்கு குழய்க்கிணறு அமைத்து அதனை கையளிக்கும் நிகழ்வு நேற்று 21 ஆம் திகதி வியாழக்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணத் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் அவர்களது பிறந்ததினத்தினை முன்னிட்டு அவரது குடும்பத்தினரின் நிதி உதவிமூலம் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்குமாகாணத் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் செயலாளர் திருமதி றொமிலா செங்கமலன் கலந்துகொண்டு இவ் குழாய்க்கிணற்றினை கையளித்தனர்

இவ் உதவியினைச் செய்த சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் அவர்களது பாரியார் மற்றும் பிள்ளைகளுக்கும் அக்குடும்பத்தினர்களும் அப்பிரதேச பொது மக்களும் பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துள்ளனர்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours