கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையில் கடந்த 10 நாட்களில் 24 ஆயிரம் பேர் பயணித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான, லாகுகலை பிரதேச செயலாளர் எஸ் .நவநீத ராஜாவிடம் கேட்டபோது ..
கடந்த 31ஆம் தேதி வரை 22,500 பேர் காட்டுக்குள் பயணம் செய்ததாக இராணுவத்தினரின் பதிவுகள் இருந்து தெரிய வருகிறது என்றும், நேற்றைய தினம் (1) 1500 பேர் அளவிலே காலையிலும் மாலையிலும் காட்டுக்குள் பிரவேசித்ததாக கூறப்படுகின்றது என்று சொன்னார் .
அதேபோல, உகந்தை முருகன் ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க தெரிவிக்கையில்.. இதுவரை காலமும் இல்லாத அளவிலே இம்முறை அதிகளவான அடியார்கள் காட்டுப் பாதையில் பயணித்து இருக்கின்றார்கள். கொடியேற்ற தினத்தன்று அதிகமானோர் அதாவது 8 ஆயிரம் அடியார்கள் பயணித்திருப்பது இதுவே முதல் தடவை ஆகும் என்றார்.
இது இவ்வாறு இருக்க, காட்டிக்குள் தொடர்ச்சியாக மழை பொழிந்து வருவதால் பாதயாத்திரீகர்கள் சிரமப்பட்டு காட்டைக் கடந்து கதிர்காமத்தை அடைய வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.

Post A Comment:
0 comments so far,add yours