எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் (எஸ்டா ) சமூகப்பணி . எருவில் கிராமத்தினை சேர்ந்த திரு குணபாலன் கார்த்திக் அவர்கள் அனுசரணையாக வழங்கிய ஐம்பதாயிரம் (50000/) ரூபாவின் ஊடாக எருவில் கிராமத்தில் வசிக்கும் 20 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்ட்ன
.எருவில் சிக்கன சேமிப்பு கடனுதவு கூட்டுறவு சங்க மண்டபத்தில் எஸ்டா அமைப்பின் ஸ்தாபக தலைவரும் எருவில் தெற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவருமாகிய சமூக சேவகர் வசீகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் அமைப்பின் ஆலோசகர்களான ச .பேரின்பநாயகம் (அகில இலங்கை சமாதான நீதவான் )மற்றும் ச .ரகுராமமூர்த்தி (முன்னாள் கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை வணக்கர் ) செயலாளர் இ .ஜீவராஜ் (ஆசிரியர் ) பொருளாளர் பொ .புஷ்பநாதன் (ஆசிரியர் )மத்திய குழு உறுப்பினர்களான சத்தியசீலன் (முகாமையாளர் செலிங்கோ களுவாஞ்சிகுடி ) சிவகிரிதாஸ் (தாஸ் ஸ்டோர்ஸ் ) சுகந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எஸ்டா அமைப்பின் சேவைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் தாமாகவே முன்வந்து அனுசரணை வழங்கிய திரு குணபாலன் கார்த்திக் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தலைவர் அ..வசிகரன்தெரிவித்துள்ளார் .அத்துடன் மண்டபத்தினை தந்துதவிய எருவில் சிக்கன சேமிப்பு கூட்டுறவு சங்க நிருவாகத்தினருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

.jpg)









Post A Comment:
0 comments so far,add yours