கதிர்காம பாதயாத்திரிகளுக்கு குடிநீர்வழங்குவதற்காக  லண்டனில் வசிக்கும் சமூகசேவகர்  ஒருதொகை நிதியினை  உகந்தை முருகன் ஆலயத்தில் வைத்து லகுகல பிரதேச செயலாளர் என்.நவநீதராஜாவிடம் வழங்கிவைக்கப்பட்டது.

லண்டனில் வசிக்கும் சமூகசேவகர் உமாச்சந்திரன் அவர்களது சொந்த நிதியினை இதற்காக வழங்கி வைத்துள்ளார்

இவ் நிதிஉதவி ஊடகவியலாளர் சா.நடனசபேசன் அவர்களது முயற்சியினால்  வழங்கிவைக்கப்பட்டது 

இந்நிகழ்வில் கிழக்குமாகாண கலாசார பணிப்பாளர்    ச.நவநீதன் ஆலய குருக்கள் சிவசிறிசீத்தாராமன் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வழமையாக அரசிடமிருந்து கிடைக்கும் நிதியுதவி இம்முறை இதுவரை கிடையாத காரணத்தினால் பிரதேச செயலாளர் அவர்கள் பொது அமைப்புகள் தனவந்தர்கள் சமுக சேவையாளரகளிடம் உதவி கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக காட்டுப்பாதை திறக்கப்படவில்லை

ஆதலால் இம்முறை  22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காட்டுப் பாதை திறக்கப்பட்டு .அதன் ஊடாக பல்லாயிரக்கணக்கான பாதயாத்திரை அடியார்கள் பயணம் செய்ய இருக்கின்றார்கள்.

 இவர்களுக்கு வழமையாக அம்பாறை அரசாங்க அதிபரிடமிருந்து கிடைக்கும் நிதியுதவி யினால் குறித்த விடையங்களை லாகுகலை பிரதேச செயலகம் செய்து வந்தது . 

நாட்டில் நிலவும் சமகால பொருளாதார நெருக்கடி காரணமாக இம்முறை அத்தகைய நிதியை பெற முடியாத சூழல் நிலவுகிறது. 

எனவே பாதயாத்திரை குழுவினருக்கு இந்த வசதிகளை வழங்குவதற்காக பொது அமைப்புகள் தலைவர்கள் மற்றும் தனவந்தர்கள் உதவுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க சுவிஸ் உதயம் அமைப்பு இவ் உதவியினை வழங்கிவைத்துள்ளது

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours