இ.சுதா

 பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு வளர் இளம் பருவம் ,கட்டிளமைப்பருவ மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலய முதல்வர் சித்திரவேல் சசிதரன் தலைமையில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது.

நிகழ்வில் வித்தியாலயத்தின் பிரதி அதிபர்.த.சசிகாந்தன் ,களுவாஞ்சிகுடி பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.உதயசூரியா மற்றும் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன்,உட்பட பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள்,சிரேஷ்ட குடுப்ப நல உத்தியோகத்தர்கள் ,குடும்ப நல உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கட்டிளமைப்பருவ மாணவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றினை எதிர் கொள்ளும் வீதம் அவற்றிக்கு தீர்வு காணும் வழி முறைகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours