( வி.ரி. சகாதேவராஜா)
கதிர்காம காட்டு பாதையின் மத்தியில் நடுக் காட்டுக்குள் அமைந்திருக்கின்ற நாவலடி என்ற இடத்தில் கால பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கின்றது.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ சிவசங்கர் ஜி தலைமையிலான குழு அக்கால வைரவர் சிலையை கடந்த 22 ஆம் தேதி பிரதிஷ்டை செய்து வைத்தது.
நடுக்காட்டிற்குள் இந்த பொருத்தமான சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டமை முக்கியத்துவம் வாய்ந்த து.
சங்கர் ஜீயுடன் ஆதித்தன் மனோகரன் மகேஸ்வரன் தியாகராஜா உள்ளிட்ட குழுவினர் அங்கு அப்பணியில் ஈடுபட்டார்கள்.
பாதயாத்திரையாக செல்லும் அடியார்கள் இக் காலபைரவர் சிலையை வழிபட்டு வருகிறார்கள். .





Post A Comment:
0 comments so far,add yours