( காரைதீவு  சகா)


 கதிர்காமம் இந்து யாத்திரிகர் விடுதியில் இந்துக்களுக்கு கதவடைப்பா? என்று இந்து அடியார்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் வரும் இந்த இந்து
 யாத்திரிகர் விடுதியில்  இந்துக்களுக்கு அங்கு அறைகளோ, மண்டபமோ இம்முறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக
 அங்குள்ள  முகாமையாளரிடம் கேட்ட பொழுது ..
எம்மிடமிருந்த 17 அறைகள் ,7 மண்டபங்களையும் கதிர்காம ஆலயம் ,பெரஹரா கலைஞர்களுக்கு என்று முன்கூட்டியே ஒதுக்கி உள்ளது. இதனால் வழமைபோல இங்கு வரும் பொதுமக்களுக்கு அறை அல்லது மண்டபம் வழங்க முடியவில்லை .என்று தெரிவித்தார்.

கதிர்காமம் செல்லும் இந்துக்கள் உணர்வோடு சென்று ,நிம்மதியாக தங்குமிடமாக இந்த இந்து யாத்திரிகர் விடுதியை குறிப்பிடலாம் .அங்கு இம் முறை இவ்வாறு இந்துக்களுக்கு கதவடைப்பு செய்யப்பட்டது மிகுந்த கவலையளிப்பதாக கூறுகின்றனர்.

இதேவேளை, அங்கு பல வருடங்களாக வழங்கப்பட்டு வந்த தெய்வீக பூமி அன்னதான குழுவினரின்  அன்னதானம் இம்முறை நடைபெறவில்லை.
 அதற்கு பொறுப்பாக இருந்த திரு.சிவஞானசுந்தரம காலமாகியதைஅடுத்து இம் முறை நடைபெறவில்லை என்று சொல்லப்பட்டது..

 மொத்தத்தில் இந்து யாத்திரிகர் விடுதி சூழல் சோபையிழந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours