( வி.ரி. சகாதேவராஜா) 

கல்வி அமைச்சின்   GEMP  நிகழ்ச்சி திட்டத்தின்கீழ், சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட சம்மாந்துறை செந்நெல் சாஹிரா கல்லூரியில் கணித ஆய்வுகூடம் அமைக்கப்பட்டு வருகிறது .

இதற்கென 2 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இரண்டு மாடியாக அமையவுள்ள  இந்த ஆய்வுக்கூடத்தில், முதல் மாடிக்காக இந்த இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் எஸ் .எம் .எம் .அமீர் இதற்கான அடிக்கல்லை அண்மையில் நட்டு வைத்தார்.

 கல்லூரி அதிபர் யூ.கே. எம் .இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours