( வி.ரி. சகாதேவராஜா)


சம்மாந்துறை அல்மர் ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி( தேசிய பாடசாலை) மாணவி ஒருவர் வைரஸ் காய்ச்சலுக்கு நேற்று பலியாகி உள்ளார்.

தரம் 7 இல் பயிலும் சம்மாந்துறையைச் சேர்ந்த 12 வயது மாணவியே இவ் விதம் பரிதாபமாக உயிரிழந்தார். பாடசாலை வெண் கொடியுடன்  சோகமயமாக காட்சியளித்தது.

இம் மரணத்தை அடுத்து  பாடசாலை மாணவர்களிடையே ஒருவித அச்சம் எழுந்துள்ளது.

நேற்று (15) அவர் இரவு கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது ஜனாசா இன்று (16) புதன்கிழமை சம்மாந்துறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

காய்ச்சல் பீடிக்கப்பட்ட நிலையில்  சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தார்.
 அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று  இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 வைரஸ் காய்ச்சலின் காரணமாக ஏற்பட்ட மரணம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சமகால மாரி மழையை அடுத்து அம்பாறை கல்முனை பிராந்தியத்தில் குறிப்பாக சம்மாந்துறை  பகுதியில் டெங்கு நோய்க்கான அறிகுறிகளும்  காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 இதேவேளை,  சம்மாந்துறை தாருஸலாம் மகா வித்யாலயத்தில் கல்வி சாரா ஊழியராக கடமை புரியும் அர்சுத்தின் என்பவர் இன்று புதன்கிழமை காலமானார். இதனால் பாடசாலையில் வெள்ளைக்கொடி கட்டப்பட்டது. 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours