எஸ்.சபேசன்


வெளியான சாதாரணதரப் பரீட்சையில் சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில்  லோகேஸ்வரன் தபோசன் 9 ஏ சித்திபெற்று சாதனை படைத்துள்ளதாக அதிபர் என் .பிரபாகர் தெரிவித்தார் 

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெள்ளிக்கிழமை   வெளியாகியிருந்தது இதில் இகாரைக்குடா வேப்பையடியினைச் சேர்ந்த லோ.தபோசன் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை நிலை நாட்டியிருப்பதுடன் பாடசாலையில் இருந்து பரீட்சைக்குத்  தோற்றி மாணவர்களில் 99.25 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றிருப்பதாக அதிபர் தெரிவித்தார் அதே வேளை சித்தியடைந்த மாணவனை அப்பிரதேசத்தினைச் சேர்ந்த பொது அமைப்புக்களும் பெற்றோர்களும் பாராட்டி இருப்பதுடன் பாடசாலையின் அதிபர் என் .பிரபாகர் அவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்கள் நன்றிதெரிவித்துள்ளனர்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours