(வி.ரி.சகாதேவராஜா,எஸ்.சபேசன்)
 உலக நீரிழிவு தினத்தை ஒட்டி கல்முனை ஆதார வைத்தியசாலையினர் இன்று(21) திங்கட்கிழமை  பைசிக்கிள் வண்டி பவனியை மேற்கொண்டனர்.
 கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா. முரளீஸ்வரன்  தலைமையில் இப்பவனி இடம் பெற்றது.

 இதன் போது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் ஊழியர்கள் அபிவிருத்திச் சபை குழுவினர் நலன் விரும்பிகளென பலரும் பைசிக்கிளில் பயணித்தார்கள்.

 நீரிழிவு நோயை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இச் சைக்கிள் பவனி ஏற்படுத்தப்பட்டது.

பவனியானது வைத்தியசாலையில் ஆரம்பித்து கல்முனை நகர் ஊடாக வலம் வந்து மீண்டும் வைத்திய சாலையை வந்தடைந்து .
அங்கு ஒரு விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்று பவனி முடிவடைந்தது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours