இ.சுதா
அரசாங்கம் அமுல் நடத்த இருக்கும் புதிய வரிவிதிப்புக்கள் சாதாரண பொதுமக்களின் வாழ்க்கைச் சுமையில் பொருளாதார ரீதியாக பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கலாநிதி கர்ச டீ சில்வா மற்றும் ஸ்ரீஜயவர்த்தன பொருளியல் பேராசிரியர் போன்றோர் முன் எச்சரிக்கையாக குறிப்பிட்டுள்ளனர். இதனை அரசாங்கம் முறையாகப் பின்பற்ற வேண்டுமென முன்னாள் பிரதியமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்தார்.
வரிவிதிப்புக்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து நாட்டை இக்கட்டானதொரு பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கி விட்டு ஒரே தடவையில் கூடுதலான வரிகளை சாதாரண பொதுமக்களின் மீது சுமத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
வாழ்கைச் செலவு உயர் வடைந்துள்ள நிலையில் விலைவாசியை குறைத்து மக்களின் வாழ்கைச் சுமையை குறைப்பது பற்றிக் கவனம் செலுத்தாமல் .ஒடுக்கு முறை மூலம் ஆட்சியை தக்கவைக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கையினை ஊக்குவிப்பது மேலும் நிலமைகளை மோசமானதாக்கும். அரசியல் அமைப்பு மூலம் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரம் ,கருத்துச் சுதந்திரம் அமைதியாக போராட்டங்களை நடத்தும் சுதந்திரம் அமைதியாக ஒன்று கூடும் சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும். எமது நாட்டின் ஜனநாயக மரபுகள், விழுமியங்கள் ,அரசியல் அமைப்பு மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் அரசு முடக்க முற்பட்டால் மேலு மக்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்புக்கள் உண்டு.இதனை தற்போதைய கவனத்திற் கொள்ள வேண்டும்.
தற்போது நாட்டில் அரச துறைகளில் பணிபுரிவோர்.நாட்டினை விட்டு ஓடவேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.காரணம் ஈடு செய்ய முடியாத பொருளாதாரச்சுமையாகும்.பண்மடங் காக உயர்வடைந்துள்ள விலைவாசி மக்களின் வாழ்வியலில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.இதனை அரசாங்கமானது துரிதமாக சீர் செய்ய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours