(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை கல்வி வலயத்திலிருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் சாதனையாளர்களை உருவாக்கும் நோக்கில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக ஈ.டீ யு.ப்ரீ அகடமி (Edu Free Academy) நிறுவனத்தினால் தரம் 05 இல் கல்வி பயிலும் இவ்வாண்டு (2022) புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவரும், நிறுவனத்தின் கல்முனை பிரதேச இணைப்பாளருமான எம்.என்.எம்.அப்ராஸ் இனால் கல்முனை கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின்  அதிபர் எம்.ஜீ.எம். றிசாத்திடம் வழங்கி வைக்கப்பட்டது.
 
இரண்டாம் கட்டமாக விநியோகிக்கப்பட்ட இந்த வினாத்தாள்கள் ஈ.டீ யு.ப்ரீ அகடமி  (Edu Free Academy) நிறுவன பணிப்பாளர்களான ஐ.எம்.றொஸான் மற்றும்  பாத்திமா ஸஹ்ரா நிஸ்பர் ஆகியோரின் வழிகாட்டுதலில் இடம்பெற்றது. 

முதலாம் கட்டமாக கல்முனை கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு கல்விக்கோட்ட பாடசாலைகளுக்கு இந்த வினாத்தாள்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண கணினி தொழிநுட்ப பேரவை பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர் அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிறுவனத்தின் பணியின் அங்கமாக எதிர்காலத்தில் சமூக சேவையில் அதிக முக்கியம் வாய்ந்த  பணியான ஏனைய பிரிவு மாணவர்களின் கல்வி அடைவினை  மேம்படுத்தும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாக  கல்முனை பிரதேச இணைப்பாளர் எம்.என்.எம்.அப்றாஸ் தெரிவித்தார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours