கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட காரைதீவு சண்முகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் வ.உதயாழினி தேசிய இலக்கியப் போட்டியில் கவிதை பாடுதல் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம்; இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தேசிய இலக்கியப் போட்டியில் காரைதீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சண்முகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் வ. உதயாழினி தேசிய ரீதியில் இரண்டாம் இடம்பெற்று சாதனை படைத்ததுடன் இவருக்கான கௌரவம் கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. இதனால் பாடசாலை மற்றும் காரைதீவு பிரதேச செயலகம் பெருமை கொள்கிறது.

Post A Comment:
0 comments so far,add yours