( வி.ரி.சகாதேவராஜா)


வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் விவசாய துறையில் பயிலும்  காரைதீவைச் சேர்ந்த ஆசிரிய  மாணவன் இராஜதுரை ஜிந்துஜன்( வயது 23) திடீர் மரணமானார்.

இச் சம்பவம் நேற்று (16.) புதன்கிழமை  மாலை  இடம்பெற்றுள்ளது ..

காரைதீவு முதலாம் பிரிவைச்  சேர்ந்த இராஜதுரை தம்பதியரின் மூத்த புதல்வர் ஆவார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது...

குறித்த மாணவன் காய்ச்சல் காரணமாக தனது விடுதியில் இருந்துள்ளார்.தனது சக  ஆசிரிய மாணவர்களிடம் உணவு வாங்கி வருமாறு கூறிவிட்டு விடுதியில்  படுத்துறங்கினார்.
 
உணவு வாங்கி கொண்டு சக மாணவர்கள் வந்த போது காய்ச்சல் காரணமாக சுகவீனமுற்று கடுமையாக அவதிப்படுள்ளார்..

இதனை அடுத்து உடனே குறித்த மாணவனை வவுனியா வைத்திசாலைக்கு கொண்டு சென்ற போதும் வைத்திய சாலைக்கு வருவதுக்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours