(சா.நடனசபேசன்)

கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார மேம்பாடு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்கிவரும் சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த அ.பகீரதன் அவர்களது மருத்துவச் செலவிற்காக 2 இலட்சம் நிதி உதவி வழங்கிவைக்கும் நிகழ்வு அமைப்பின் பிரதித்தலைவர் ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண.வரதராஜன் தலைமையில் சனிக்கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்வில்அமைப்பின் கிழக்கு மாகாண செயலாளர் ரொமிலா செங்கமலன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உறுப்பினர் அகிலன் ஆகியோர் இணைந்து இந் நிதியினை வழங்கிவைத்தனர்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இவர் சுவீஸ் உதயம் அமைப்பினரிடம் கோரிக்கை விடுத்தற்கு இணங்க சுவிஸ் நாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் தாய்ச்சங்கத்தின் உறுப்பினர்களின் பூரண ஒத்துழைப்புடன் சுவிஸ் உதயம்  அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் மூலம் இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது 






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours