அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான முடிவு பொதுவானதாக இருக்க வேண்டுமே தவிர வெவ்வேறு நபர்களால் முடிவெடுக்க முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டால் அதற்கென கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டும்.

வசதியான ஆடைகளை அணிந்து அலுவலகங்களுக்கு வருமாறு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை தன்னிச்சையாக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான முடிவு பொதுவானதாக இருக்க வேண்டுமே தவிர வெவ்வேறு நபர்களால் முடிவெடுக்க முடியாது.எனவே, அமைப்பு இல்லாமல் தன்னிச்சையாக மாற்றங்களைச் செய்தால் கண்டிப்பாக நீதிமன்றம் செல்வோம். தற்போது உள்ளதை அப்படி மாற்ற முடியாது.

சேலை அணிவதில் வெளிப்படையாக எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆசிரியர்கள் சேலை அணிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அவர்களுக்கு சீருடை கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டும்.”என கூறியுள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours