இ.சுதாகரன்




மண்முனை பிரதேச சபையின் கீழ் இயங்கும் புதுக்குடியிருப்பு உப அலுவலகம் நீண்ட காலமாக செயற்பாடு அற்ற நிலையில் காணப்பட்டமை உணர்ந்த பிரதேச சபையின் கெளரவ தவிசாளர். ந.தயானந்தன் அவர்களின் அயராத முயற்சியால் உலக வங்கியின் நிதி உதவியினூடாக செயற்படும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான உதவித்திட்ட நிதியின் கீழ் ஒரு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கட்டடமானது மக்கள் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

சபையின் கெளரவ தவிசாளர் ந.தயானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உப தவிசாளர் மா.சுந்தரலிங்கம் கெளரவ உறுப்பினர்கள்,செயலாளர்.ஜே.சர்வேஸ்வரன்,சனமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் மா.கருணாநிதி,அலுவலக உத்தியோகத்தர்கள் ,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் கிரான்குளம் ,புதுக்குடியிருப்பு ,தாழங்குடா கிராமங்களை  உள்ளடக்கிய 9கிராம சேவகர் பிரிவு மக்கள் பயனடையவுள்ளனர்.மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் காலடிக்கு சென்று சேவையினை வழங்குவதற்கு முன்வந்த அனைவருக்கும் பொதுமக்கள் நன்றியினை தெரிவிக்கின்றனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours