(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்ராஸ்)

மருதமுனை வீச் யங்கர்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாறையின் முக்கிய பல கழகங்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற டாக்டர் சிராஸ் மீராசாஹிப் வெற்றிக்கிண்ண கடற்கரை உதைபந்து சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டங்கள் இன்று (13) இரவு கல்முனை மாநகர சபை உறுப்பினரும், சுற்றுப்போட்டி ஏற்பாட்டு குழுவின் தலைவருமான ஏ.ஆர்.ஏ. அமீர் தலைமையில் இடம்பெற்றது.

மருதமுனை மருதம் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம் மோதிய இன்றைய இறுதி ஆட்டத்தில் 02-01 என்ற தண்டனை உதை (கோல் கணக்கில்) மூலம்  மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று சம்பியனானது.

இந்த போட்டிகளில் கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வரும், மெற்றோபொலிட்டன் கல்லூரி தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ்ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டார்.

மேலும் அம்பாறை மாவட்ட உதைப்பந்து லீக் தலைவர் வை.கே. ரஹ்மான், பொதுச் செயலாளர் எம்.எச்.எம். அப்துல் மனாப், பொருளாளர் எஸ். முஹம்மட் கான், லீக்கின் பிரதித்தலைவரும், மாவட்ட நடுவர் குழு தவிசாளருமான எம்.பீ. எம்.றஸீட், லீக்கின் பிரதித்தலைவரும் மேன்முறையீட்டு சபை தவிசாளருமான நியாஸ் எம். அப்பாஸ், ரோஷன் லங்கா நிறுவன உரிமையாளர் முஹம்மட் ரொஷான், ஐ.டி.க்கியூ லெப் நிறுவன பணிப்பாளர் சபூர் ஆதம், கிழக்கின் கேடயம் பொதுச்செயலாளர் யூ.எல்.என் ஹுதா, இணை அனுசரணை வழங்கிய அனுசரணையாளர்கள், மெற்றோபொலிட்டன் கல்லூரி கல்முனை கிளை அதிகாரிகள், பிரதேச விளையாட்டுக்கழகங்களின் நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இச்சுற்றுப்போட்டியின் மூன்றாம் இடத்தை மருதமுனை கிரீன் மெக்ஸ் விளையாட்டு கழகம் தனதாக்கி கொண்டது. வெற்றியீட்டிய வீரர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டதுடன் கழகங்களுக்கு வெற்றிக்கேடயமும், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.






 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours