மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை கமநல கேந்திர நிலையத்தின் புதிய தலைவர் தெரிவு இன்;றைய தினம் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்றது. இதில் பெருவெளி கண்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரம் சந்திரமோகன் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
வந்தாறுமூலை கமநல கேந்திர நிலையத்தின் கீழ் பிரதேசத்தின் 24 விவசாய அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. தலைவர் தெரிவின் போது 23 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். மேற்படி கமநல கேந்திர நிலையத்தின் தலைவர் பதவிக்கு பெருவெளி கண்டத்தைச் சேர்ந்த ச.சந்திரமோகன் மற்றும் காயானடி கண்டத்தைச் சேர்ந்த கி.செல்வராசா ஆகியோர் போட்டியிட்டிருந்தனர். வாக்கெடுப்பின் போது ச.சந்திரமோகன் 15 வாக்குகளையும், கி.செல்வராசா 08 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

.jpeg)


Post A Comment:
0 comments so far,add yours