நூற்றாண்டுகள் பழமையான பதுளை பசறை கோனாகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் நாளை (20) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
சித்தர்களின் குரல் சமஸ்தானத்தின் கீழ் அதன் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜியின் பூரண ஏற்பாட்டில் புனரமைக்கப்பட்டு நாளை கும்பாபிஷேகம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் தினம் (18)கணபதி ஹோமத்துடன் அனைத்து கிரிகைகளும் ஆரம்பமாயிருக்கிறது.
"இக் கும்பாபிஷேகம் அந்த ஊர் மக்களின் 40 வருட கனவு" என அந்த ஆலயத்தின் தலைவர் எஸ். சிம்மேந்திரன் குழுவினர் கண்ணீர் மல்க கூறினர்.
இரவு பகலாக இந்த மாபெரும் கும்பாபிஷேகத்தை தமது செலவில் நெறிப்படுத்தி ஒழுங்கமைத்த சித்தர்களின் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி. தலைவர் ஆதித்தன், துணைத்தலைவர் மனோகரன், சிவயோகி மகேஸ்வரன் சுவாமிகள், டிரோன் போடியார், வீரமுனை சனுஷ்காந்த் ஆகியோருக்கு ஆலய பரிபாலன சபையினர் நன்றி தெரிவிக்கின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours