பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தில் சங்கீத வாத்தியக் கருவிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் திரு.எஸ்.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. 

2006 க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயின்று வெளியேறிய மாணவ குழுக்களின் நிதிப் பங்களிப்பில் இசைக் கருவிகள் வழங்கபட்டன.

 இதற்கான நிதியினை பழைய மாணவர்களான திரு.எம்.சசிகரன் திரு.எஸ்.சுதர்மன் திரு.ஆர்.மிகாயாடிஷாந் திரு.ஆர்.பிரதீபன் திருமதி.கே.பிரியா ஆகியோர் 105000 ரூபாவினை  வழங்கி வைத்தனர். 

இந்நிகழ்வில் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் சமூகசேவகர் தமிழரசுக் கட்சியின் எருவில் வட்டாரத்தின் பிரதித் தலைவர் பழைய மாணவர் சங்க உறுப்பினருமாகிய அ.வசிகரன பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு.கே.யுவராஜ் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.ரீ.ஜாதவரூபன் பொருளார் திரு.பொ.புஸ்பநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours