( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை பகுதியில் இருக்கின்ற டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையினர் பாடசாலை ஆசிரியர்களுக்கு இலவச மருத்துவ முகாமை நடத்தி வருகின்றனர்.

இன்று (9) புதன்கிழமை சம்மாந்துறை செந்நெல் சாஹிரா  மகாவித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாம் இடம் பெற்றது.

 நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பொதுமக்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

 டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பொது முகாமையாளர்  எம் எஸ் எம். நஜ்முடீன் தலைமையில் டாக்டர் ஜமால்டீன், டாக்டர் அசாப் ஆகியோரின் கண்காணிப்பில் இந்த முகாம் நடாத்தப்பட்டது.

 சம்மாந்துறைக் கிளை முகாமையாளர் ஹாபி பிஸ்ருல்  மஜீத் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பிரதேசத்தில் இதுவரை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும் ,செந்நெல் சாஹிரா மகாவித்தியாலயத்திலும் முகாம் நடைபெற்று
 இருக்கின்றது.

 மாதத்திற்கு மூன்று பாடசாலைகள் .
அதன் அடிப்படையில் கல்முனை வலயத்திலே இதுவரை ஸாகிரா  கல்லூரி ,சாய்ந்தமருது அல்ஹிலால் மகா வித்தியாலயம், அல் ஜலால் வித்தியாலயம் ஆகியமூன்று பாடசாலைகளில் இடம் பெற்றன.

 எதிர்வரும் வாரங்களில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இடம்பெற இருக்கின்றது என பொது முகாமையாளர் நஜ்முடீன் தெரிவித்தார்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours