எஸ்.சபேசன்

பட்டிருப்புக் கல்விவலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தின் ஆசிரியர் நல்லதம்பி ஜெனந்திரராஜன் தனது 38 வருட கல்விச்சேவையில் இருந்து வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி ஓய்வுபெற்றுள்ளார்.

இவர் குறுமண்வெளியினைப் பிறப்பிடமாகவும் துறைநீலாவணையினை வதிவிடமாகவும் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியினை குறுமண்வெளி கனிஷ்;டவித்தியாலயத்திலும் உயர்தரத்தினை பட்டிருப்பு தேசிய பாடசாலையிலும் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகமானிப்பட்டத்தினையும் பெற்றுள்ளார்

இவர் 1984.12.27  அன்று ஆசிரியராக தனது முதல்நியமனத்தினைப் பெற்று குருநாகல் மாவட்டத்தில் வல்பாலுவ முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கற்பித்து பின்னர் பட்டிருப்புக் கல்விவலயத்திற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி விநாயகர் வித்தியாலயத்திலும் ,குறுமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலம் ,மண்டூர் மகாவித்தியாலயம் , துறைநீலாவணை மகாவித்தியாலம,; உதயபுரம்
தமிழ்வித்தியாலயம் , ஆகியபாடசாலையில் கற்பித்து இறுதியாக பெரியால்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தில் கற்பித்தநிலையில் ஓய்வுபெற்றுள்ளார்

இவர் தனது சேவைக்காலத்தில் பிரதி அதிபராகவும் பகுதித்தலைவராகவும் இருந்து சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours