பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலை விடுமுறை காலப்பகுதி மற்றும் பாடசாலை 1.30 இற்கு நிறைவு பெற்றபின்னரும் எவ்வித கடமைகளும் இன்றி வெறுமனே பாடசாலையில் தரித்து நிற்பதனால் பெரும் அசௌகரியங்ளை எதிர்நோக்கிவருவதுடன் பெண் உத்தியோத்தர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக இருப்பதனால் தாங்களும் பாடசாலை கலையும் நேரத்திற்கு வீட்டுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கோரிக்கை மகஜரினை பட்டதாரி ஒன்றியத்தின் தலைவர் அசங்க ருபசிங்க மற்றும் கிழக்குமாகாண பட்டதாரிகள் ஒன்றியத்தின் இணைப்பாளர் கே. அனிரன் ஆகியோர்கள் கையொப்பம் இட்டு இராஜாங்க கல்வி அமைச்சர் அரவீந்த குமார் அவர்களுக்கு அனுபடபிவைத்துள்ளனர்
அவ் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு
கடந்த வருடம் அதாவது 2020.09.02ம் முன்னால் ஜனாதிபதி அவர்களால் 53,000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டு அவர்களுள் குறிப்பிட்ட பகுதினர் பாடசாலையில் நிலவுகின்ற பாடரீதியான வெற்றிடங்களுக்கு அமைவாக பயிற்சி ஆசிரியர்களாக கடந்த இரண்டு வருடங்களாக பணியாற்றி வருகின்றனர்.
அதன்படி இத்தரப்பினர் குறித்து தற்போது வரை சேவைப்பிரமானக் கோவையொன்றை வெளியிடமால் இருப்பதும் அத்துடன் நாடு கொண்டுள்ள பொருளதார நெருக்கடியில் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டு ஆசிரியர்களாக பணிபுரிகின்றவர்களுக்கு ஒர் பாரிய சாவல் நிறைந்த பிரச்சனையாக மாறியுள்ளது. அதனால்தான் பின்வரும் விடயங்களை கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்
பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனும் அடிப்படையில் பாடசாலை நாட்களில் ஓரு நிரந்திர ஆசிரியர்களைப் போன்று தங்களது பணியில் உறுதிப்படுத்தவேண்டும் என்பதற்காக எந்தவொரு பணிச் செயற்பாடுகளும் இல்லாத சூழ்நிலைகளிலும் மிகுந்த தொலை தூரம் சென்று எங்களது கையொப்பத்தினை இட்டு அதாவது காலை - 07.30 மணிக்கு சென்று பிற்பகல் - 3.15 மணிவரை பாடசாலையில் எந்தவொரு பணிகளுமின்றி கைவிரல் அடையாள இயந்திரத்தினூடாக வருகை மற்றும் வெளிச்செல்லல் போன்றவற்றினை உறுதிப்படுத்திவிட்டு வருகின்றோம்
அத்தோடு பாடசாலை நாட்களில் காலை - 07.30 மணி தொடக்கம் - பிற்பகல் - 1.30 மணி வரை அதாவது பாடசாலை மாணவர்களின ; கற்றல் கற்பித்தல் சார்ந்த காலப்பகுதியில் ஒர் ஆசிரியராக கடமையினை ஆற்றிய பின் பிற்பகல் - 01.30 தொடக்கம் பிற்பகல் - 03.15 வரை எந்தவொரு பணிகளுமின்றி எட்டுமணி நேர பணிகள்முடியும் வரை பாடசாலையில் தரித்து நிற்கின்றோம். எனவே கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சராகிய நீங்கள ; தற்போது நாட்டின் பொருளாதார நெருக்கடியில் மேற்கூறப்பட்ட விடயங்கள் எங்களை வெகுவாக பாதிக்கின்றது. ஆகவே மேல் காணும் இரண்டு விடயங்களினையும் கருதிற்கொண்டு இவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் வரைக்கும் பாடசாலையின் ஒரு நிரந்திர ஆசிரியருக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற பணிமுடிவு நேரம் மற்றும் பாடசாலை விடுமுறை காலங்களில் வழங்கப்படும் தவணை விடுமுறை என்பவற்றினையும் பெற்றுத்தருமாறு மிக பணிவுடன் வேண்டி நிற்கின்றோம் என அம்மகஜரில் குறிப்பிப்பட்டுள்ளது
.png)
Post A Comment:
0 comments so far,add yours