எஸ்.சபேசன்

சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு லண்டன் அன்னை பத்திரா  தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில்  கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வு 30 ஆம் திகதி அதிபர் என்.பிரபாகர் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலையின் ஆசிரியர் நிமலராஜன் அவர்கள் பத்திரா தொண்டு நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் ஓய்வுநிலை பொறியியலாளர் க.யோகராசா அவர்களது முயற்சியினால் இப்பாடசாலையில் கல்வி பயிலும் 54 மாணவர்களுக்கு இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அன்னை பத்த்pரா தொண்டு நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் ஓய்வுநிலை பொறியியலாளர் க.யோகராசா அவர்களது மருமகன் ஓய்வுநிலை பொறியியலாளர் சமூகசேவகர் லயன்ஸ் எஸ்.சசேந்திரன் மற்றும் அவரது பாரியார் குமுதா சசேந்திரன் உட்பட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இவ் உதவியினை வழங்கிவைக்க உதவிய அனைவருக்கும் அப்பிரதேச பொதுமக்கள் நன்றிதெரிவித்துள்ளனர்.














Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours