மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் வருடாந்தம் ஒழுங்குசெய்து நடாத்தப்படும் ஒளி விழா நிகழ்வானது இவ்வருடமும் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமை மற்றும் வழிக்காட்டுதலில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (29.12.2022) மிகச் சிறப்பான முறையில் ஒழுங்குசெய்து நடாத்தப்பட்டது.மங்கல விளக்கேற்றல் மற்றும் அருட்பணி J. மார்சல் (புனித யூதாததேயு தேவாலயம், தேற்றாத்தீவு), அருட்திரு I. அமலதாஸ்( கெத்செமனே சுவிசேஷ சபை, பெரியகல்லாறு) ஆகியோரின் ஆசிச்செய்தியுடன் ஆரம்பமான இந் நிகழ்வினை தொடர்ந்து மாணவர்களினால் கரோல் கீதம், நாடகம், நடனம் போன்ற பல கலைநிகழ்வுகள் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நத்தார் தாத்தா வருகையும், நிகழ்வுகளை ஆற்றுகை செய்த மாணவர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான பரிசு வழங்கலும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு த. நிர்மல்ராஜ், நிர்வாக உத்தியோகத்தர் திரு வே. தவேந்திரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி புவனேஸ்வரி ஜீவகுமார் , முகாமைத்துவ பணிப்பாளர் திரு கே உதயகுமார் , மேலதிக மாவட்ட பதிவாளர் திரு அ. பேரின்பநாயகம் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







Post A Comment:
0 comments so far,add yours