அபு அலா -
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக மீராலெவ்வை முஹம்மது றியாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த ஏ.எல்.எம்.ஹம்ஸா கட்சியிலிந்தும், உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அதே கட்சியைச் சேர்ந்த மீராலெவ்வை முஹம்மது றியாஸ் கட்சியின் செயலாளரினால் நியமிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை (08) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை காரியாலயத்தில் அக்கட்சியின் பிரதிச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் மற்றும் சட்டத்தரணி அஷ்ஷேக் ஏ.எல்.எம்.காசிம் ஆகியோர் முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்து கொண்டார்.
இவரது நியமனம் தொடர்பாக கடந்த 18.12.2022 ஆம் திகதிய அதிவிஷேட வர்த்தகமானியில் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours