இவ் வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இறுதி வழிகாட்டல்  செயலமர்வு எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் சமூகசேவகர் தமிழரசுக் கட்சியின் எருவில் வட்டாரத்தின் பிரதித் தலைவர் அ.வசிகரன் அவர்களது நிதி உதவி மூலம் இடம்பெற்றது.

இச் செயலமர்வானது எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றதுடன்  அப்பாடசாலையின் அதிபர் சி.சத்தியநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் சமூகசேவகர் தமிழரசுக் கட்சியின் எருவில் வட்டாரத்தின் பிரதித் தலைவர் அ.வசிகரன் அவ் இமைப்பின் ஆலோசகர் தாஸன் பொருளாளர் ஆசிரியருமான பொ.புஸ்பநாதன் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர். வளவாளர்களாக கி.கலேஜன் எஸ் .அருள்குமார் ஆகியோர் செயற்பட்மை குறிப்பிடத்தக்கது

இதில் பரீட்சை நடாத்தப்பட்டு 160 இற்கு மேல் புள்ளி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours