( வி.ரி. சகாதேவராஜா)



கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக திருமதி பேரின்பராஜா மனோரஞ்சினி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

பாண்டிருப்பைச் சேர்ந்த மனோரஞ்சினி சிறந்த சமூக சேவையாளராவார்.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக இருந்த கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி அண்மையில் காலமானதையடுத்து அந்த இடத்திற்கு அதே கட்சியை சேர்ந்த மனோரஞ்சினி நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

நியமன கடிதத்தை கட்சியின் செயலாளர்  பாலித ரங்கே பண்டார உத்தியோகபூர்வமாக கொழும்பு தலைமையகத்தில் வைத்து கையளித்தார்.

இவரது நியமனம் தொடர்பாக 02.12.2023 அதிவிஷேஷ வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

 அடுத்த சபைஅமர்வில் அவர் கல்முனை மாநகர சபையில் பதவி ஏற்க இருக்கின்றார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours