ஒழுக்கத்துடன் கூடிய கல்வி சிறப்பானது. அதுபோல ஒழுக்கத்துடன் கூடிய விளையாட்டு சிறப்பானது. அது அவசியமாகும்.
இவ்வாறு காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் குறிப்பிட்டார்.
கிழக்கின் பழம்பெரும் கழகமாம் காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமானது கழகத் தலைமையகத்தில் கழகத் தலைவர் வெ.அருட்குமரன் தலைமையில் நேற்று முன்தினம் (24) இரவு நடைபெற்றது . அதிதிகளாக கழகப் போசகர்களான பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், உத்தரவு பெற்ற நில அளவையாளர் வே . இராஜேந்திரன் , உதவிக் கல்விப்ணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா மற்றும் டாக்டர்.ம.ரமணன் காரைதீவு பிரதேச சபை செயலாளர் அ.சுந்தரகுமார், தர்மகத்தா இ.திருநாவுக்கரசு ஆகியோர் கலந்துகொண்டனர் .
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.
ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் போது அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தீர்த்துக் கொள்ள வேண்டும். தாமதித்தால் விளைவு விபரீதமாகும் என்றார்.
கழகச் செயலாளர் ச.கிரிசாந்த் ஆண்டறிக்கையை சமர்ப்பிக்க , நிதிச் செயலாளர் அ.பிரேமானந்த் கடந்தகால நிதி அறிக்கையை சமர்ப்பித்தார் .
இதன்போது 2023ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது .
புதிய தலைவராக ரி.தவக்குமார், செயலாளராக எஸ்.கிருஷாந்த் , பொருளாளராக எ.பிரேமானந்த் உள்ளிட்ட புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது .





Post A Comment:
0 comments so far,add yours