(வி.ரி. சகாதேவராஜா)


கிழக்கு மாகாண மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளராக  ரோட்டரியன் சண்முகம் தங்கராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணம் மற்றும் ஊவா மாகாணத்திற்கு 01.01.2023 தொடக்கம் கலால் திணைக்களத்தின் புதிய ஆணையாளர்களாக ரோட்டரியன் சண்முகம் தங்கராஜா மற்றும் ரோட்டரியன் செல்வராசா ரஞ்சன் ஆகியோர்பதவி உயர்வு பெற்று கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட கலால் அத்தியட்சகராக கடமையாற்றிய செல்வராஜா ரஞ்சன்  ஊவா மாகாணத்தின் புதிய கலால் உதவி ஆணையாளராகவும்;, அம்பாரை மாவட்டத்தின் கலால் அத்தியட்சகராக கடமையாற்றிய சண்முகம் தங்கராஜா  கிழக்கு மாகாணத்தின் புதிய உதவி ஆணையாளராகவும் பதவி உயர்வு பெற்று 01.01.2023 அன்று தங்கள் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக்கடிதங்களை நேற்று மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குணசிறி அனுப்பி வைத்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours