நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களுக்கும் ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்களுக்கு மிடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.  

2023 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள செயற்றிட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் தொடர்பிலும் பிரசவ நடவடிக்கைகளின் மேம்பாடு மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட வைத்தியசாலையின் சேவை வழங்கலில் காணப்படும் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. 
குறித்த கலந்துரையாடலில் சம்மாந்துறை, நிந்தவூர், பொத்துவில், திருக்கோவில், ஆகிய வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்களும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலை திட்டமிடல் வைத்தியர் நியாஸ் ஆகியோரும் பங்கு பற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours