மண்முணை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் கௌரவ ஞானமுத்து யோகநாதன் அவர்களின் மறைவு எமது மண்ணிற்கு பேரிழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடகசெயலாளரும், இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
சுகவீனகாரணமாக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் 01/12/2022, இன்று இயற்கை எய்திய தவிசாளர் ஞா. யோகநாதன் அவர்களுக்கான இரங்கல் செய்தியில் மேலும் கூறுகையில்
தமிழ்தேசியகூட்டமைப்பு தமிழீழவிடுதலை இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினராகவும், 2018, உள்ளூராட்சி் சபை தேர்தலின்போது களுதாவளை வட்டாரத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றிபெற்று தவிசாளராக அன்று தொடக்கம் இன்றுவரையும் நேர்மையாகவும், தமிழ்தேசிய உணர்வுடனும், மண்முனை தென் எருவில் பற்று செயகல வட்டாரங்களிலும் திறம்பட முடிந்த சேவைகளை பற்றுடன் ஆற்றிவந்த ஒரு பெருமனை நாம் இழந்துள்ளோம்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினராக 2018, ல் அவர் கடமை புரிவதற்கு முன்னம் இலங்கை தமிழரசு கட்சியின் பற்றாறராகவும் அந்த கட்சியில் ஆதரவாளராகவும் செயல்பட்ட வரலாறுகள் பல உண்டு.
நான் பல சந்தர்பங்களில் பல விடயங்கள் தொடர்பாக தொலைபேசிமூலமாகவும், நேரடியாகவும் அவருடன் கதைக்கும் போதெல்லாம் மிகவும் பக்குவமாக அவர் கதைத்து சொல்லும் விடயங்களுக்கு பண்பாக பதில்களை வழங்கும் ஒருவராக இவர் எப்போதும் இருந்தார்.
கடந்த அக்டோபர் 19, ம் திகதி அவரிடம் திருகோணமலை கொணேசர் கோயிலில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரதேச சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றும்படி கேட்டேன்.
உடனே எந்த மறுப்பு சொல்லாமல் நாளை சபைக கூட்டம் உள்ளது எப்படி தீர்மானம் எடுக்கவேண்டும் என கூறுங்கள் என கேட்டார் நான் விடயத்தை விபராமாக கூறினேன் மறுநாள் 20/10/2022,ல் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
அவரே தலைமை உரையில் திருகோணமலை கோணேசர் கோயில் ஆக்கிரமிப்பை எதிர்த்து தீர்மானம் எடுக்கும்போது இவ்வாறு உரையாற்றி அவரே தீர்மானத்தை முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் உரை..
கிழக்கு மாகாணத்திலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக திருகோணமையில் அமைந்துள்ள கோணேஸ்வரர் ஆலயம் திகழ்கின்றது. இந்நிலையில் அவ்வாலயம் தொல்பொருள் என்ற போர்வையில் ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன, அங்கு சிங்கள ஆக்கிரமிப்புக் கடைகளால் ஆலயத்தின் புனிதத்தன்மை பாதிக்கப்படுகின்றன.
இவைகளையெல்லாம் இந்த அரசாங்கம் சட்டத்திற்கு மாறாக அனைத்தையும் மூடிமறைத்து, இந்து மதத்தையும் மக்களையும் வரலாற்றையும் மூடி மறைக்க அரசு முயல்கின்றது. தமிழர்களை ஆக்கிரமிப்புச் செய்கின்ற செயற்பாடு கிழக்கில் மாத்திரமின்றி வடக்கிலும் நடந்தேறி வருகின்றன. எனவே கோணேஸ்வரர் ஆலயத்தின் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் இச்சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றுகின்றோம்.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று - களுதாவளை பிரதேச சபைத் தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் பிரேரணையை முன்மொழிந்து ஏகமனதாக தீர்மானம் இன்று (20/10/2022) மு.ப 10, மணிக்கு நிறைவேற்றப்பட்டது.
மேற்படி சபையின் 56 வது சபை அமர்வு களுதாவளையில் அமைந்துள் பிரதேச சபையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது சபைக்குத் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அன்னாரின் இழப்பு எமது தமிழ்தேசிய அரசியலுக்கு பேரிழப்பாகும் என மேலும் கூறினார்.

Post A Comment:
0 comments so far,add yours