(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ்  பரிசோதகராக ஜீ.எம்.பீ.ஆர்.பண்டார
நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ்  பரிசோதகராக கடமையாற்றி வந்த
பீ.கே.எட்டியாராட்சி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் குறித்த பதவி வெற்றிடத்திற்கு
அம்பாறை தலைமையக பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜீ.எம்.பீ.ஆர்.பண்டார பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனை முன்னிட்டு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக ஜீ.எம்.பீ.ஆர்.பண்டார  இன்று 28.12.2022 திகதி புதன்கிழமை  சமய வழிபாடுகளை தொடர்ந்து உத்தியோகபூர்வமாக தனது கடமைப் பொறுப்புக்களை ஆரம்பித்துள்ளார்.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours