(வி.ரி. சகாதேவராஜா)


 ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த சம்பவத்தில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா   சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் .

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 70 வயதுடையவர்  9 கிராமும் 850 மில்லி கிராமும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 3 மாதங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார் , 

அவரது அடையாள மற்றும் தண்டனைத் தீர்ப்புக்காக நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். 
இதன் போது இவருக்கு ஒருவருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது

முதல் 6 மாத கடுழிய சிறைத் தண்டனையும் மிகுதி 6 மாத காலச் சிறைத் தண்டனை7 வருட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையும்  விதிக்கப்பட்டுள்ளதுடன் ருபா 10 000.00 தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours