( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு இந்து சமய விருத்தி சங்கம்  எல்லா வருடாவருடம் நடத்தி வரும் திருப்பள்ளி எழுச்சி திருவம்பாவை ஊர்வலத்தின் இறுதி நாளான இன்று(6) வெள்ளிக்கிழமை ஏழு தேர்கள் சகிதம் திருவாதிரை தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஏழு ஆலயங்களின் அலங்கரிக்கப்பட்ட  தேர்கள் சகிதம் நடராஜர் தேர் அதிகாலை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி ஊர்வலம் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.

இந்த அதிகாலை ஊர்வலத்தில் ஏகப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று பத்தாம் நாள் ஊர்வலம் நேராக பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தை சென்றடைய அங்கு திருவெம்பாவை பாடப் பட்டது.

அங்கிருந்து தேரோடும் வீதி வழியாக ஊர்வலம் சகல ஆலயங்களுக்கும் சென்று இறுதியில் சமுத்திரத்தை அடைந்தது.

அங்கு வீரபத்திரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரூபன் ஐயா விஷேட அபிஷேக பூஜை நடாத்தினார்.

காலை 11 மணியளவில் சமுத்திரத்திலே திருவாதிரை தீர்த்தம் இடம் பெற்றது.

சமுத்திரம் சீற்றமாக இருந்த காரணத்தால் பக்தர்கள் முழுமையாக இறங்கி நீராட அனுமதிக்கப்படவில்லை.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours