( வி.ரி. சகாதேவராஜா)
மலேசிய ரோட்டரிக் கழகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு ரோட்டரிக் கழகம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கி வருகிறது.
மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத் தலைவர் றோட்டரியன் பி.ரமணன் தலைமையிலான குழுவினர் அவற்றை வழங்கி வருகின்றனர்.
நேற்று முகத்துவாரம் மட்டிக்கழி கிராமத்திலுள்ள வசதி குறைந்த மாணவி ஒருவருக்கு துவிச் சக்கர வண்டியை தலைவர் றோட்டரியன் ரமணன் வழங்கி வைத்தார்.
அத்துடன் மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

.jpg)




Post A Comment:
0 comments so far,add yours