சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

அம்பாறை மாவட்டத்தில் "வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுத்தல் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தல் "எனும் தொனிப்பொருளில் GAFSO நிறுவனத்தால் மாவட்ட அளவிலான  இளைஞர் மன்ற அறிமுக பெருவிழாவானது  கடந்த வியாழக்கிழமை (19)  சம்மாந்துறை அல்-மஜீட் நகர மண்டபத்தில்  நடைபெற்றது..

GCERF, HELVETAS நிறுவனங்களின் நிதியுதவியுடன்  GAFSO நிறுவனத்தின் அமுல்படுத்தலின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் செயற்படுத்தி வரும் HOPE OF YOUTH (இளைஞர்களின் நம்பிக்கை) எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக சுமார் 8 பிரதேச செயலக இளைஞர்களை ஒன்றினைத்து  மாவட்ட அளவிளான மன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.

இந்நிகழ்வானது GAFSO நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட்  அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் ,அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் , சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்  , தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் அதேபோல இளைஞர் சேவை அதிகாரிகள் ,சமூக சேவைஉத்தியோகத்தர்கள்  மற்றும்  இளைஞர் மன்றங்களின்  ஒருங்கிணைப்பாளர்கள்  இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் HOPE OF YOUTH வேலைத்திட்டத்தின் பங்குபற்றுனர்களினால்  கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வன்முறையற்ற இளைஞர் சமூகத்திற்க்காக இளைஞர் உறுதிமொழி எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours